முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்நாட்டின் இளம் சதுரங்க வீரர் அன்புமகன் பிரக்ஞானந்தா அவர்கள் நார்வே…

0

தமிழ்நாட்டின் இளம் சதுரங்க வீரர் அன்புமகன் பிரக்ஞானந்தா அவர்கள் நார்வே சதுரங்க தொடர் – 2026 வாகையர் பட்டத்தை வென்று தமிழ் மண்ணிற்கும், மக்களுக்கும் அளப்பரிய பெருமை சேர்த்துள்ளதை அறிந்து பெருமிதமும், பேருவகையும் அடைந்தேன்.

உலகின் முன்னணி சதுரங்க வீரர்களையெல்லாம் வீழ்த்தி இந்தியப் பெருநாட்டிலேயே முதன்முறையாக நார்வே சதுரங்கப் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ள பிரக்ஞானந்தா, சதுரங்க ஆட்டத்தில் தமக்குள்ள அளப்பரிய தனித்திறன் மூலம் உலக வாகையர் பட்டத்தை வெல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை.

வருங்காலங்களில் மேலும் பல பன்னாட்டு சதுரங்கப் பட்டங்களை வென்று, உலகின் முதல்நிலை சதுரங்க வீரராகத் திகழ அன்புமகன் பிரக்ஞானந்தாவிற்கு என்னுடைய பேரன்பும், வாழ்த்துகளும்!

@rpraggnachess

Exit mobile version