முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கொடுங்கோல் மன்னன் யசீத் ஆட்சியில் நிகழ்ந்த அடக்குமுறை அநீதிகளுக்கு எதிராக,…

0

கொடுங்கோல் மன்னன் யசீத் ஆட்சியில் நிகழ்ந்த அடக்குமுறை அநீதிகளுக்கு எதிராக, அறத்தின் வழி நின்று, தீரத்துடன் போராடி, தன்னையும், தன் குடும்பத்தையும் கர்பாலா பாலைவன நிலத்திற்கு ஈகம் செய்த, இறைதூதர் நபிகள் நாயகம் அவர்களின் பேரன் இமாம் உசேன் அவர்களின் ஈடு இணையற்ற வீரத்தையும், ஈகத்தையும் போற்றி, நினைவுகூரும் புனித 'மொகரம்' திருநாளில், என்னரும்
இசுலாமியச் சொந்தங்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாவின் நல்லருள் கிடைக்கப்பெறட்டும்!

ஆட்சியாளர்களின் அநீதிக்கு எதிராக அஞ்சாது போராடும் உள உறுதி எல்லோரிடத்தும் எப்போதும் நிலைக்கட்டும்!

Exit mobile version