க.எண்: 2026060207
நாள்: 23.06.2026
காவிரி உரிமை மீட்புக் குழு மற்றும் நாம் தமிழர் கட்சி இணைந்து நடத்தும்
‘காவிரி எங்கள் உரிமை!’
சட்டமன்றத் தீர்மான நகல் எரிப்புப் போராட்டம்
காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நதிநீர் பங்கீட்டைத் தரவும் சட்டவிதிகள் வலியுறுத்துகின்றன. நடுவர் மன்றத் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வழிகாட்டுகின்றன. அவற்றையெல்லாம் புறந்தள்ளி எதேச்சதிகாரப்போக்கோடு காவிரியாற்றின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைத் தடுக்க வக்கற்று, மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக புதிய நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் தவெக அரசின் சட்டமன்றத் தீர்மானம் என்பது முழுக்க முழுக்க தமிழின விரோதமாகும். அதனைக் கண்டித்து, காவிரி உரிமை மீட்புக் குழு மற்றும் நாம் தமிழர் கட்சி இணைந்து, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்களின் தலைமையில் வருகின்ற ஆனி 12ஆம் நாள் 27.06.2026 சனிக்கிழமையன்று காலை 10 மணியளவில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் ‘காவிரி எங்கள் உரிமை!’ சட்டமன்றத் தீர்மான நகல் எரிப்புப் போராட்டம் நடத்தவிருக்கிறது.
இப்போராட்டத்தில், கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட மற்றும் கிளைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி



