க.எண்: 2026060208
நாள்: 23.06.2026
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே கடலுக்குள் ஹட்ரோகார்பன் எடுக்கும் நாசகரத் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஆனி 13ஆம் நாள் (27-06-2026) சனிக்கிழமை காலை 09 மணியளவில் பரங்கிப்பேட்டை வண்டிக்காரத் தெருவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
பரங்கிப்பேட்டை அருகே கடலுக்குள் ஹட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி
நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டம்
நடத்தும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்:
ஆனி 13 சனிக்கிழமை | 27-06-2026 காலை 09 மணிக்கு
இடம்: பரங்கிப்பேட்டை
(வண்டிக்காரத் தெரு)
இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், கடலூர், பாண்டிச்சேரி அருகிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த நாம் தமிழர் உறவுகளும் நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். -தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி



