நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட
மண்டபம் ஒன்றியத்தின் முன்னாள் தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் அன்பு அண்ணன் தாமரைக்குளம் பா.அருளொளி முருகன் அவர்களின் தாயார் அம்மா லோகம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.
உயிருக்கினிய தாயை இழந்து வாடும் அண்ணன் அருளொளி முருகன் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா லோகம்மாள் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!




