முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தொகுதி, வேலூர் ஊராட்சியைச் சேர்ந்த பொறுப்பாளர்…

0

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தொகுதி, வேலூர் ஊராட்சியைச் சேர்ந்த பொறுப்பாளர் சகோதரர் மோகன் அவர்களின் அன்புமகள் வினோதினி அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். அன்பு மகளை இழந்து வாடும் சகோதரர் மோகன் அவர்களின் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கின்றேன்.

16 வயதேயான மகள் வினோதினி அவர்களின் தற்கொலைக்கு காரணமான குற்றவாளிகளை விரைந்து கைது செய்து கடும் தண்டனையைப் பெற்றுத்தர வேண்டுமென தமிழ்நாடு காவல்துறையை வலியுறுத்துகிறேன்.

அன்புமகள் மோ.வினோதினி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம் !

Exit mobile version