முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கள் இறக்குவதற்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி மட்டுமே தொடர்ச்சியாக…

0

கள் இறக்குவதற்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி மட்டுமே தொடர்ச்சியாக போராடியும் வருகிறது. சங்க காலம் தொட்டுத் தமிழ் மக்களின் பயன்பாட்டில் உள்ள ‘கள்’, எங்களின் பாரம்பரிய உணவு மட்டுமல்ல, அது எங்களின் உரிமையுமாகும்.

பனைத் தொழிலாளர்களுக்கு எதிராக தமிழ்நாடு அரசும், காவல்துறையும் புரிகின்ற இக்கொடுமைகள் எல்லாவற்றையும் மக்கள் கவனித்துக்கொண்டுதான் உள்ளார்கள். வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்.

தம்பி மணிகண்டன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜா மீது, கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்வதோடு, வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

(2/2)

Exit mobile version