தன்னுடைய இனிய குரல் வளத்தாலும், தேர்ந்த நடிப்புத் திறனாலும், காண்போரை கவரும் கவின்மிகு தோற்றத்தாலும், தமிழ்த்திரையுலகின் முதல் உச்ச நட்சத்திரமாய் ஒளிர்ந்து ரசிகர்களால் நெஞ்சம் நிறைந்து நேசிக்கப்பட்ட சிம்மக்குரலோன்..!
கவலை தீர்க்கும் கலைப்பணி மூலம் ஏழை மக்களுக்கு உதவிகள் பல செய்த வள்ளல்..!
ஆங்கிலேயரையும் தன் நடிப்புத்திறனுக்கு அடிமையாக்கிய ஆற்றல் மிகு கலைஞர்..!
முதன் முதலாக ஓராண்டைக் கடந்து திரையிடப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படமான சிந்தாமணி தொடங்கி, மூன்று ஆண்டுகள் தொடர்ந்து திரையிடப்பட்ட ஹரிதாஸ் வரை புகழ்மிக்க திரைக்காவியங்கள் பல தந்து சரித்திர சாதனை படைத்த வெற்றி நாயகன்..!
நம்முடைய தாத்தா, ஏழிசை ஏந்தல் மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர் எனும் மா.கி.தியாகராஜ பாகவதர் அவர்களின் காலத்தால் அழியாத கலைப்புகழ் போற்றுவோம்!




