வழக்கறிஞரும், அரசியல் ஆய்வாளருமான என் அன்பிற்குரிய அண்ணன் இரவீந்திரன் துரைசாமி அவர்களின் அன்பு தந்தை, மதிப்பிற்குரிய ஐயா து.ஸ்ரீகிருஷ்ணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
என் மீதும், நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியின் மீதும் பெரும் அக்கறைகொண்ட அண்ணன் ரவீந்திரன் துரைசாமி அவர்கள்,
பாசத்திற்குரிய தந்தையை இழந்துவாடும் இத்துயர்மிகு சூழலில், அவருக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதோடு, துயரிலும் பங்கெடுக்கின்றேன்.
அன்பு அப்பா து.ஸ்ரீ கிருஷ்ணன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!




