முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழீழத்தாயக விடுதலைப் போராட்டம் தொடங்கிய காலத்திலேயே அப்போராட்டத்தில் தம்மை இணைத்துக்…

0

தமிழீழத்தாயக விடுதலைப் போராட்டம் தொடங்கிய காலத்திலேயே அப்போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டு இன உணர்வுடன் தாயகப் பணியாற்றிய விடுதலைப் போராளி..

தமிழின விடுதலையையே தம் உயிர் மூச்சாக வரித்துக்கொண்டு, தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் தமிழ், தமிழர், தமிழீழத்தாயக மீட்சிக்காகவே ஒப்படைத்து வாழ்ந்த பெருந்தகை..

தான் மட்டுமல்லாது, தன் குடும்பத்தையும் தாயக உணர்வுடன் வழிநடத்தி விடுதலைப்பணியில் ஈடுபடுத்திய புரட்சிப் பெண்மணி..

தம் சிந்தை முழுதும் ஈழம், தலைவர், மாவீரர்கள் எனும் உணர்வு நிறைத்து, தமிழ்த் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மீது அப்பழுக்கற்ற பேரன்பும், பெருமதிப்பும் கொண்டு வாழ்ந்த பெருமாட்டி..

ஈழப் போரின் பின்னடைவு காலங்களில் இனம் துவண்டு நின்ற வேளையிலும்
தீரத்துடன் செயல்பட்ட வீரத்திருமகள்..

தமிழீழத் தாயக விடுதலைப் போராட்டத்திற்குப் பிறகு, நாம் தமிழர் இயக்கத்திலும் தம்மை இணைத்துக் கொண்டு, என்னையும், நாம் தமிழர் கட்சியையும், தமிழ் மக்களையும் பேரன்பு கொண்டு நேசித்து நின்ற போற்றுதற்குரிய தாய் முதுசம் சுமதி சீவரட்னம்
அம்மா அவர்கள் மறைவெய்திய செய்தி இதயத்தை கனக்கச் செய்கிறது.

அம்மா அவர்களின் இழப்பு தனிப்பட்ட அவருடைய குடும்பத்திற்கான இழப்பு மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழினத்திற்கு நேர்ந்துள்ள பேரிழப்பாகும்.

இனமானத் தாயை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தாயகப்பற்றாளர்களுக்கும், உலகெங்கும் வாழும் தமிழ்ச்சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.

தமிழீத்தாயக விடுதலைப்பேரொளி
அம்மா முதுசம் சுமதி சீவரட்னம் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!

Exit mobile version