முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – பாண்டிச்சேரி மாநிலத்திற்கு குருதிக்கொடை முகாம்கள் ஏற்பாடு

22

க.எண்: 2026030116
நாள்: 06.03.2026

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் – 2026இல் பாண்டிச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட
28 சட்டமன்றத் தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனைவரையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாசி 23 (07-03-2026) அன்று மாலை 04 மணியளவில் பாண்டிச்சேரி, ஒழுங்குமுறை விற்பனைக்கூடத் திடலில் (முருகா திரையரங்கம் அருகில்) நடைபெறவிருக்கிறது.
ஒவ்வொரு துளியும் உயிர் காக்கும்; மக்களை ஒன்றிணைக்கும் என்ற உன்னத நோக்கில் குருதிக்கொடைப் பாசறை சார்பாக இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில், குருதிக்கொடை முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குருதிக்கொடை வழங்க விரும்பும் உறவுகள் முகாம்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குருதிக்கொடை முகாம் பொறுப்பாளர்கள்: அ.பூமணி 7867870772
ஆரோக்கியசாமி 9626452963
கார்த்திக் 9894658473
மேலும் தொடர்புக்கு: அரிமா மு.ப.செ.நாதன் குருதிக்கொடைப் பாசறை – மாநிலச் செயலாளர்
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version