முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – அறிவிப்பு: (இடம் மாற்றம்)

1

க.எண்: 2026070227அ
நாள்: 24.07.2026

அறிவிப்பு: (இடம் மாற்றம்)

நீட் முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் எதிராக டெல்லியில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்-இளைஞர் கூட்டத்தினர் மீது கண்மூடித்தனமாக தடியடி தாக்குதல் நடத்திய ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும், டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் மாணவர்களும், இளைஞர்களும் போராட முனையும்போது, அதனைக் காவல்துறையினர் மூலம் அடக்கி ஒடுக்கும் தவெக அரசைக் கண்டித்தும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், கட்சியின் மாணவர் பாசறை மற்றும் இளைஞர் பாசறை இணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை பனகல் மாளிகை அருகில் நடைபெறவிருக்கிறது.
நீட் முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் எதிராக டெல்லியில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்-இளைஞர்களுக்கு ஆதரவாகவும், அரசதிகாரம் கொண்டு அடக்கி ஒடுக்கும் ஒன்றிய-மாநில அரசுகளைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி – மாணவர் பாசறை மற்றும் இளைஞர் பாசறை இணைந்து முன்னெடுக்கும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்:
ஆடி 09 சனிக்கிழமை | 25-07-2026 காலை 10 மணிக்கு
இடம்:
சென்னை சைதாப்பேட்டை
(பனகல் மாளிகை அருகில்)
இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version