முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மன்னராட்சி மறைந்தது.. மக்களாட்சி மலர்ந்தது.. என்பதை ஏட்டளவில் மட்டும் எழுதி…

0

மன்னராட்சி மறைந்தது..
மக்களாட்சி மலர்ந்தது..
என்பதை ஏட்டளவில் மட்டும்
எழுதி வைத்த
குடியரசு திருநாள் இன்று..!

கொடுங்கோன்மை அடக்குமுறை
கொள்ளை போகும் கனிமவளம்
துறை தோறும் ஊழல் இலஞ்சம்
எதிர்த்து கேட்டால் தேசத்துரோகம்
தடுக்க நினைத்தால் குண்டர் சட்டம்
ஆனாலும் இந்த நாடு
ஆகிவிட்டது குடியரசு..!

மலிவு விலை மதுக்கடையில்
அரசாங்கமே மது விற்கும்
போதைப்பொருள் விற்பனையை
தடுக்காது ஊக்குவிக்கும்
சீரழியும் இளந்தலைமுறையை
சிந்திக்காத கொடிய அரசு
ஆனாலும் இந்த நாடு
ஆகிவிட்டது குடியரசு..!

பல்லாயிரம் கோடி கடனாளி
சொகுசாக வெளிநாட்டில்,
பயிர் வைக்க கடன் வாங்கி
உயிர் இழக்கும் விவசாயி;
ஏற்றத்தாழ்வு குறையவில்லை
ஏதும் மாற்றம் நிகழவில்லை;
ஆனாலும் இந்த நாடு
ஆகிவிட்டது குடியரசு..!

வெளிநாட்டு நிறுவனங்களை
வரவேற்று முரசு கொட்டும்;
அம்பானிக்கும் அதானிக்கும்
கூடுதல் சலுகை காட்டும்;
தாங்க முடியாத வரி விதித்து
நாட்டு மக்களை ஒழித்துக்கட்டும்;
ஆனாலும் இந்த நாடு
ஆகிவிட்டது குடியரசு..!

பட்டப்பகலில் படுகொலைகள்
பாலியல் வன்கொடுமைகள்,
பள்ளிக்கூட சிறுமிகளுக்கும்
பாலியல் கொடுந்தொல்லைகள்,
வேடிக்கை பார்க்கும் கொடிய அரசு
ஆனாலும் இந்த நாடு
ஆகிவிட்டது குடியரசு..!

கடவுள் பெயரால் கலவரங்கள்
மதத்தின் பெயரால் பிரிவினைகள்
சாதிச்சண்டைகள் ஏராளம்
சமய சண்டைகள் தாராளம்
தூண்டிவிடும் கொடும் அரசு..
ஆனாலும் இந்த நாடு
ஆகிவிட்டது குடியரசு..!

ஓட்டுக்கு காசு கொடுக்கும்
இலஞ்சம் மட்டுமே தேசிய மயம்
ஆயிரம் ஐநூறு இலவசம் தரும்
ஊழல் மட்டுமே சட்ட மயம்
சீட்டுக்கும் நோட்டுக்கும் பேரம் பேசி
கொள்ளையடிக்க கூட்டு வைத்தால்
அதன் பெயர் கொள்கை கூட்டணி
ஏனென்றால் இந்த நாடு
ஆகிவிட்டது குடியரசு..!

சங்கம் வைத்து தமிழ் வளர்த்தால் மன்னராட்சி..
சங்கம் வைத்து சாதி வளர்த்தால் மக்களாட்சி..!
வாரிசுகளுக்கே மன்னர் பதவி
அது முடியரசு..
வாரிசுகளுக்கே முதலமைச்சர் பதவி
அது குடியரசு..!

இக்கொடுமைகள் யாவும் நீங்கி,

பணநாயகம் வீழ்ந்து
சனநாயகம் வென்று
உண்மையான குடிகளின் அரசு
விரைவில் மலர்ந்திட
நாட்டு மக்கள் அனைவருக்கும்
குடியரசு நாள்
நல்வாழ்த்துகள்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version