முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாட்டின் விடுதலைக்குப் போராடி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வதைபட்ட…

0

நாட்டின் விடுதலைக்குப் போராடி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வதைபட்ட விடுதலை வீரர்..!

தமிழ் பண்பாட்டையும், இலக்கியத்தையும் பொதுவுடைமை மேடைகளில் முதன் முதலில் அரங்கேற்றி, தாய் மொழியையும் மண்ணையும் பேசாத எந்த அரசியலும் வெல்லாது என்பதை உணர்த்திய உண்மையான பொதுவுடைமைப் போராளி..!

வைக்கம் முதல் சுசீந்திரம் வரை பல்வேறு தீண்டாமை ஒழிப்பு போராட்டங்களில் பங்கேற்று நடத்திய புரட்சியாளர்..!

'பாரதியார்' மகாகவி வரிசையில் வரமாட்டார் என்ற வாதங்கள் வைக்கப்பட்டபோது, தன் சொற்பொழிவுகள் வாயிலாகவும், பாரதி வழி என்றொரு நூல் எழுதியும் பாட்டன் பாரதியை பட்டித்தொட்டி எங்கும் கொண்டு சேர்த்த பெருந்தமிழர்..!

எந்த தலைவரின் பெயரால் சிராவயலில் ஆசிரமம் நடத்தினாரோ அந்த காந்தியையும், சுயமரியாதை மரியாதை இயக்கத்தில் இணைந்து பின் விலகி, ஈரோட்டு பாதை சரியா? என்ற நூல் எழுதி ஈ.வே.ராவையும் விமர்சன பார்வையோடு அணுகிய பேரறிஞர்..!

நான் ஏன் நாத்திகனானேன்?' என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தற்காக, மானத்துடனும், வீரத்துடனும் மன்னிப்பு கேட்க மறுத்து ஆங்கிலேயர்களால் அடக்கு முறைக்கு ஆளான தீரர்..!

உழைக்கும் மக்களின் உரிமைக்காக தொழிற்சங்கங்களை நிறுவிய பாட்டாளிகளின் தோழன்..!

விடுதலைப்போராட்ட வீரர், தீண்டாமை ஒழிப்பு போராளி, பொதுவுடமைவாதி, பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், பத்ரிகையாளர் என பல்வேறு தளங்களில் நாட்டு மக்களுக்காக
அரும்பாடுபட்ட பன்முக ஆற்றலாளர்..!

இடிப்பில் கட்டிய ஒற்றை வேட்டியுடன், சுடுகாட்டு நிலத்தில் ஒழுகும் குடிசையில் புத்தகங்களுக்கு நடுவே, மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் வாழ்ந்து மறைந்த பொதுவுடைமை பிதாமகன் நம்முடைய தாத்தா பா.ஜீவானந்தம் பெரும்புகழ் போற்றுவோம்!

நாம் தமிழர்!

Exit mobile version