முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி மாணவர்…

0

நாம் தமிழர் கட்சி – வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி மாணவர்
பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் தம்பி க.ஹரிஹரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். இந்தத் துயரச் செய்தி நம்மை மிகுந்த வேதனையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. நமது தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

‘நாம் தமிழர்’ எனும் இனமானப் பெரும்படையில் தன்னை
இணைத்துக் கொண்டு, அயராது களப்பணியாற்றிய தம்பியின் இழப்பு பெருந்துயரத்தைத் தருகிறது. கட்சியின் வேர்களாகத் திகழும் களப்போராளிகளின் இழப்பென்பது ஈடு இணையற்றது. மறைந்தாலும் தம்பியின் கனவுகளும், இலட்சியங்களும் நம்மோடுதான் இருக்கும். அதனை ஈடேற்ற உறுதியேற்போம்.

தம்பி ஹரிஹரன் அவர்களுக்கு என்னுடைய
கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

Exit mobile version