முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மக்கள் விடுதலை பாவலர் பெருமதிப்பிற்குரிய ஐயா ஏ.பி.நாயகம் அவர்கள் மறைவுற்ற…

0

மக்கள் விடுதலை பாவலர் பெருமதிப்பிற்குரிய ஐயா ஏ.பி.நாயகம் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து, அதிர்ச்சியும் மிகுந்த மனவேனையும் அடைந்தேன்.

பாவலர், பாடகர், மரபிசைக் கலைஞர், பேச்சாளர், ஆய்வாளர், எழுத்தாளர் என பன்முகத்திறன் படைத்த ஐயா நாயகம் அவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு அரும்பாடு ஆற்றிய பெருந்தகையாவார்.

நாட்டுப்புற கலைஞர்களோடு இணைந்த சம கால அரசியல் மற்றும் சமூக சீர்கேடுகளுக்கு எதிராக ஐயா நாயகம் அவர்கள் ஆக்கித்தந்த இசைப்பாடல்கள் அனைத்தும்
மிகுந்த போற்றுதலுக்குரியவை.
புரட்சிகர சிந்தனைகள் எளிய மக்களையும் சென்றடையும் வண்ணம் மக்கள் இசை பாடல்களாக வரித்து தந்த தமிழ் பெருங்கலைஞனின் மறைவு ஈடுசெய்யவியலாத பேரிழப்பாகும்.

ஐயா நாயகம் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.

மக்கள் விடுதலை பாவலர்
ஐயா ஏ.பி.நாயகம் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

Exit mobile version