போற்றுதற்குரிய கல்வியாளர், சமூகநல ஆர்வலர், பல்லாயிரம் மாணவர்களின் அறிவுக்கண்களை திறந்த இமாம் ஷாபி பள்ளியின் தாளாளர், ஷிபா மருத்துவமனை நிறுவனர், பெருமதிப்பிற்குரிய ஐயா ஜனாப் எம்.எஸ்.தாஜூதீன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
ஏழை எளிய மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக
கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல், வேலைவாய்ப்பு, உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் ஐயா எம்.எஸ்.தாஜூதீன் அவர்கள் ஆற்றியுள்ள அரும்பணிகள் என்றென்றும் நினைவுக்கூரத்தக்கவை!
ஐயா அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய, குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அவரால் பயன்பெற்ற மாணவர்களுக்கும், மக்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
போற்றுதற்குரிய பெருந்தகை
ஐயா ஜனாப் எம்.எஸ்.தாஜூதீன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!




