'சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்'
என்று தமிழ்மறை கூறும் அறநெறிக்கேற்ப, உள்ளத்தில் உண்மை ஒளிகொண்டு குற்ற இருளகற்றி, மக்களுக்கும் மண்ணுக்கும் எதிராக நிகழ்த்தப்படும் அத்தனை அநீதிகளுக்கும் எதிராக நீதியை நிலைநாட்ட, தம்மையே ஒப்படைத்து காவலரணாக திகழும் வழக்கறிஞர் பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வழக்கறிஞர்கள் நாள் நல்வாழ்த்துகள்!




