செளராஷ்ட்ரா அரசியல் ஒருங்கிணைப்புக் குழுவுடன் அனைத்து செளராஷ்ட்ரா சமூக அமைப்புகள் இணைந்து நடத்தும் தமிழ்நாடு செளராஷ்ட்ரா அரசியல் எழுச்சி மாநாடு – 2025, மார்கழி 13ஆம் நாள் (28-12-2025) மாலை 04 மணியளவில் மதுரை இராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில், நாம் தமிழர் கட்சி சார்பாக சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று உரையாற்றினேன்.







