நாம் தமிழர் கட்சி – பாபநாசம் சட்டமன்றத் தொகுதி, அய்யம்பேட்டையைச் சேர்ந்த தொழிற்சங்கப் பேரவை மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி அ.நிக்சன் அவர்களின் தாயார் அம்மா அ.பிரகாசம் மேரி அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
அம்மா அ.பிரகாசம் மேரி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




