நாம் தமிழர் கட்சி – தொழிற்சங்கப் பாசறையின் இணைச் செயலாளர் என்னுடைய ஆருயிர் இளவல் நெய்வேலி ரமேஷ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். தம்பியை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.
நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட தொடக்கக் காலந்தொட்டு கட்சியைத் தனது பகுதியில் வளர்த்தெடுக்க அரும்பாடாற்றி உழைத்தவர் தம்பி ரமேஷ். அவர் அயலகத்தில் பணிபுரிந்தபோதிலும் அங்கிருந்து கொண்டே தாயகத்தில் கட்சியின் வளர்ச்சிக்கான பணிகளை திட்டமிட்டு செயலாற்றிய தீவிர செயற்பாட்டாளர் ஆவார். இனமானம் காக்கும் போரினில் தானே பொருளாதாரத்தைச் செலவிட்டு, களத்திலும் முன்நின்று கட்சியின் நலனுக்காக பெரிதும் உழைத்த களத் தளபதியான தம்பி நெய்வேலி ரமேஷின் இழப்பு என்னை வெகுவாகப் பாதித்திருக்கிறது. கட்சியின் நலனுக்காக அயராது உழைத்த தம்பி ரமேஷின் மறைவு நாம் தமிழர் கட்சிக்கே ஏற்பட்டப் பேரிழப்பாகும்.
தம்பி நெய்வேலி ரமேஷ் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!




