முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சென்னை வண்ணாரப்பேட்டை செரியன் நகரைச் சேர்ந்த அன்புமகள் கீர்த்தனா அவர்கள்,…

0

சென்னை வண்ணாரப்பேட்டை செரியன் நகரைச் சேர்ந்த அன்புமகள் கீர்த்தனா அவர்கள், மாலத்தீவில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டிற்கான உலக வாகையர் சுண்டாட்டம் (கேரம்) போட்டியில் மகளிர் பிரிவில் பங்கேற்று ஒற்றையர், இரட்டையர் மற்றும் மகளிர் குழுப்போட்டி ஆகிய மூன்று பிரிவுகளிலும் தங்கப்பதக்கம் வென்றதுடன், உலக சுண்டாட்ட வாகையர் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ள செய்தியறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பிள்ளைகள் தங்களின் தனித்திறனை வளர்த்து கபடி, சதுரங்கம், சுண்டாட்டம் என அடுத்தடுத்து உலகளாவிய போட்டிகளில் பதக்கங்கள் பல வென்று சாதனை படைப்பதன் மூலம் தமிழ் மண்ணிற்கும், இனத்திற்கும் அளப்பரிய பெருமை சேர்ப்பது மிகுந்த பெருமிதம் அளிக்கின்றது.

ஏழ்மையான சூழலிலும் மனம் தளராது, சோர்வுற்று பின்னடையாது, தம்முடைய அயராத முயற்சியாலும், கடுமையான பயிற்சியாலும் தடைகள் யாவையும் தாண்டி சாதனை படைத்துள்ள அன்புமகள் கீர்த்தனா அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

Exit mobile version