தமிழ்ச் சமயங்கள் மற்றும் பண்பாட்டு விழுமியங்கள் குறித்து ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டு தமிழின அறிவுலகில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திய தமிழர் வரலாற்றுப் பெரியார்..!
என் பேச்சில், என் எழுத்தில், என் சிந்தனையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி எம்மை வளர்த்தெடுத்த போற்றுதற்குரிய பேராசிரியர்..!
எளிய கிராமத்தில் பிறந்த என்னைப் போன்ற எண்ணற்றவர்களுக்குக் கல்வியோடு தமிழுணர்வையும், மானுடச்சிந்தனையையும், சமூகப்பார்வையையும் ஊட்டிய மாமனிதர்..!
நாம் தமிழர் என்கின்ற பெரும்படையை நாங்கள் கட்டியெழுப்பியபோது எங்களுக்கு வகுப்பெடுத்த பெருந்தகை..!
அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள், அழகர் கோயில், தெய்வம் என்பதோர், சமயங்களின் அரசியல் போன்ற பல நூல்களை தமிழினத்திற்குப் படைத்தளித்த பெருமகன்..!
மதுரை தியாகராயர் கல்லூரி, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி எண்ணற்ற அறிஞர்களை, ஆய்வாளர்களை உருவாக்கிய பேரறிஞர்..!
காலத்தால் அழியாத ஐயா தொ. ப அவர்களின் ஆய்வு நூல்களும், அவர் கற்பித்த பாடங்களும் தலைமுறை கடந்தும் தமிழினத்தை வழிநடத்திச்செல்லும் வல்லமை பெற்றவை..!
கடினமான ஆய்வு நூல்களைக்கூட எளிய தமிழில் சொல்லக்கூடிய மகத்தான எழுத்தாளுமை..!
தமிழ்ப்பண்பாட்டுப் பேரறிஞர் நம்முடைய ஐயா பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!




