நாம் தமிழர் கட்சி – தேனி மாவட்ட வழக்கறிஞர் பாசறை செயலாளர் அன்புத்தம்பி வழக்கறிஞர் செல்வகுமார் அவர்களின் தந்தை சு.முருகன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
பாசத்திற்குரிய தந்தையை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.
ஐயா சு.முருகன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




