முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – நன்னிலம் சட்டமன்றத் தொகுதி, வலங்கைமான்…

0

நாம் தமிழர் கட்சி – நன்னிலம் சட்டமன்றத் தொகுதி, வலங்கைமான் மேற்கு ஒன்றியம், எரிவேலுர் ஊராட்சி, வேலாக்குடியைச் சேர்ந்த தமிழ் மீட்சி பாசறை- மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி ஜெ.ஜெயக்குமார் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக்கொண்டு, தமிழ் மீட்சி பாசறையில் களப்பணியாற்றி வந்த ஜெ.ஜெயக்குமார் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.

தம்பியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தம்பி ஜெ.ஜெயக்குமார் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version