முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

‘தூத்துக்குடி தந்தை’ போற்றுதற்குரிய நம்முடைய ஐயா குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின்…

0

‘தூத்துக்குடி தந்தை’ போற்றுதற்குரிய நம்முடைய ஐயா குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் பெரும் புகழ் போற்றுவோம்!

30 ஆண்டுகாலம் தூத்துக்குடி நகர்மன்றத் தலைவராகவும், 5 முறை தூத்துக்குடி நகராட்சித்தலைவராவும் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தன்னலமற்று பணியாற்றிய மக்கள் தலைவர்..!

முதலாம் உலகப்போரால் ஏற்பட்ட பொருளாதாரத் தடைகளையும் தாண்டி, 25 ஆண்டுகள் அரும்பாடுபட்டு 1932 ஆம் ஆண்டுத் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி தூத்துக்குடி மக்களின் தாகம் தணித்த மாமனிதர்..!

ஏழைக் குழந்தைகளின் கல்வி முன்னேற்றம், குடிசை வீடுகள் மேம்பாடு, தீண்டாமைக் கொடுமைகள் எதிர்ப்பு, கூட்டுறவு வங்கிக் கடனுதவி, மக்கள் நலன் காக்கும் மருத்துவ நிலையங்கள், சனிக்கிழமை சந்தை, பொதுவான கல்லறைத் தோட்டம் எனப் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்திய பெருந்தகை..

அப்பழுக்கற்ற பொதுவாழ்வின் இலக்கணமாய் வாழ்ந்து, தன்னலமற்ற தூய மக்கள் தொண்டு புரிந்து, நூற்றாண்டு கடந்தும் தூத்துக்குடி மக்களால் நன்றியுடன் நினைவுக்கூரப்படும் மக்கள் தலைவர், முத்துநகர் கண்டெடுத்த சொத்து, போற்றுதற்குரிய நம்முடைய ஐயா ‘தூத்துக்குடியின் தந்தை’ குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் 156 வது பிறந்தநாளில் ஐயா அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!

Exit mobile version