நீலப்புலிகள் இயக்கத்தின் தலைவர் எனது அன்பிற்கினிய தம்பி பேராசிரியர் டி.எம்.புரட்சிமணி அவர்களின் தாயார் அம்மா ஆயிஷா அவர்கள் காலமாகிவிட்டார்கள் என்ற செய்தி அறிந்து மிகவும் மனம் வேதனை அடைந்தேன்.
நீலப்புலிகள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் மாபெரும் சமூகப் போராளி பெருந்தமிழர் ஐயா டி.எம்.மணி (எ) டி.எம்.உமர் பாரூக் அவர்களின் வாழ்க்கைத் துணையாக இருந்து, கற்றறிந்த சான்றோர் பெருமக்களாக தனது பிள்ளைகளை வளர்த்து, ஐயா அவர்களின் சமூகப் போராட்டக் களத்தில் உறுதுணையாக திகழ்ந்த அம்மா ஆயிஷா அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
அம்மாவை இழந்து வாடும் நீலப்புலிகள் இயக்கத் தலைவர் என் தம்பி டி.எம்.புரட்சிமணி அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், நீலப்புலிகள் இயக்கத்தின் உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கேற்கிறேன்.
அம்மா ஆயிஷா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்.




