முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த்திரையை தம் கலைத்திறனால் கட்டி ஆளும்…

0

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த்திரையை தம் கலைத்திறனால் கட்டி ஆளும் உலக நாயகன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர், என் பேரன்பிற்குரிய அண்ணன் கமல்ஹாசன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

திரைக்கலை மீது கொண்டிருக்கும் அளப்பெரும் காதலால் புதுமையான முயற்சிகளையும், நவீன மாற்றங்களையும் புகுத்தி, தமிழ்த்திரையுலகைப் பன்னாட்டுத்தரத்திற்கு எடுத்துச் சென்ற ஆகச்சிறந்த திரைக்கலைஞர்!

நடிப்பின் பேரிலக்கணமாய் திகழ்ந்து, வருங்கால தலைமுறையினருக்கு வழிகாட்டும் பல்கலைக்கழகமாய் விளங்கும் கலைத்துறையின் பேராசான்!

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடனக்கலைஞர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, பாடலாசிரியர், பாடகர் எனப் பன்முகத்திறன் கொண்ட மகத்தான படைப்பாளி!

இந்நூற்றாண்டின் ஈடுஇணையற்ற பெருங்கலைஞர்,
திரைத்துறையின் பேராளுமை,
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்
மாநிலங்களவை உறுப்பினர் பெருமதிப்பிற்குரிய அண்ணன் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் மக்களை மகிழ்விக்கும் கலைப்பணியோடு, அரசியல் பணியும் சிறக்க என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!

@ikamalhaasan

Exit mobile version