நாம் தமிழர் கட்சி – அரூர் சட்டமன்றத் தொகுதி மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை யு.ரித்திகா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தொடக்காலத்திலிருந்து தன்னை இணைத்துக்கொண்டு, துளியும் சமரசமின்றி களப்பணியாற்றி வந்த ரித்திகா அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
அன்புத்தங்கை ரித்திகாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.
அன்புத்தங்கை ரித்திகா அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!




