நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
அன்புத்தங்கை ம.பாக்கியலட்சுமி அவர்களின் தந்தையும்,
மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி பசுவை ப.மனோகரன் அவர்களின் மாமனாருமாகிய, பெருமாக்கநல்லூர் தமிழ்த்தேசியப் பற்றாளரும், முன்னாள் இராணுவ வீரருமான ஐயா பி.காசிராமன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
தமிழ்த்தேசியப் பற்றாளர் ஐயா பி.காசிராமன் அவர்களை இழந்து வாடும் தங்கை பாக்கியலட்சுமி மற்றும் தம்பி மனோகரன் ஆகியோரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களின் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா பி.காசிராமன் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!




