முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பஹ்ரைன் நாட்டின் மனாமா நகரில் நடைபெற்று வரும் ஆசிய இளைஞர்…

0

பஹ்ரைன் நாட்டின் மனாமா நகரில் நடைபெற்று வரும் ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் – 2025 இல் தமிழ்நாட்டின் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த அன்புமகள் கார்த்திகாவின் சிறப்பான பங்களிப்புடன் இந்திய மகளிர் கபடி அணி இறுதிப் போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ள செய்தி மிகுந்த பெருமிதமளிக்கிறது.

அதேபோன்று தமிழ்நாட்டைச்சேர்ந்த அன்புமகன் அபினேஷ் மோகன்தாஸ் இடம்பெற்றிருந்த இந்திய ஆடவர் கபடி அணியும் தங்கம் வென்றிருப்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாட்டைச்சேர்ந்த இளம்பிள்ளைகள் தங்கள் தனித்திறனை வளர்த்து, தம்முடைய கடுமையான பயிற்சினாலும், அயராத முயற்சியினாலும் அடுத்தடுத்து சாதனைகள் புரிவது, தமிழ் மண்ணிற்கும் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் வரலாற்று பெருநிகழ்வாகும்.

அன்பு பிள்ளைகள் இருவரும் கபடி போட்டியில் தங்கள் பங்களிப்பை சிறப்புற தந்து பதக்கங்கள் பல வென்று மென்மேலும் சாதனை படைக்க நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version