முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பெருந்தலைவர் தாத்தா காமராசரின் அமைச்சரவையில் தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சராகப்…

0

பெருந்தலைவர் தாத்தா காமராசரின் அமைச்சரவையில் தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சராகப் பணியாற்றிய பெருமாட்டி!

உள்ளாட்சி மற்றும் மீன்வளத்துறையில் தொலைநோக்கு பார்வையுடன் சீரிய திட்டங்களைத் தீட்டிய ஆகச்சிறந்த நிர்வாகி!

தனது அறிவாலும் உழைப்பாலும் சாதனைகள் பல புரிந்து, குமரி மண்ணின் பெருமைமிக்க மகள் அம்மையார் லூர்தம்மாள் பிறந்தநாள் இன்று‌!

மரிய லூர்தம்மாள் தான் அமைச்சராக பதவி வகித்த இரு துறைகளிலும் அளப்பரிய சாதனைகளை செய்தவர்..

அம்மையார் மரிய லூர்தம்மாள் குறிப்பாக மாவட்ட அளவில் உருவாக்கப்படும் திட்டங்கள் கிராமங்கள்வரை போய் சேராததை உணர்ந்து 1958-ல் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தை உருவாக்கி, அனைத்து அதிகாரங்களையும் கிராமம், ஒன்றியம் என்ற அளவில் ஒட்டுமொத்த உள்ளாட்சி கட்டமைப்பேயே மாற்றியமைத்தார். உள்ளாட்சி அமைப்புகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு உறுதி செய்யவும், பெண்களை நியமன உறுப்பினர்களாக கொண்டுவரவும் வழிவகை செய்தார்.

கால்நடைகள் வளர்ப்பு, மீன் பண்ணைகள் போன்றவற்றை ஊக்குவிப்பது, அவற்றுக்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவது என மக்களும் நாடும் சேர்ந்து வளர்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தினார்.

சென்னை மாநகராட்சி கொடுக்கும் விளம்பரங்கள் இந்தி, தெலுங்கு மொழிகளில்கூட இருக்கலாம் என்னும் நிலையை சென்னை மாநகராட்சி திருத்த மசோதா 55-ன் மூலம் நீக்கி, விளம்பரங்கள் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்தார்.

மீனவர்களுக்கான கூட்டுறவு சங்கங்கள் அமைத்தல், மீனவ கிராமங்களில் நூலகங்கள் அமைத்தல், மீனவ பெண்களுக்கு நெசவு, தையல் போன்ற தொழில் பயிற்சிகள் அளித்தல், தமிழ்நாடு மீனவர்களுக்கு நவீன இயந்திர படகுகள் மற்றும் வலைகளையும் அறிமுகப்படுத்துதல் என பல முன்னோடி திட்டங்களை கொண்டு பெருந்தகை!

மேலும் நன்னீர் மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் ஜிலேபி கெண்டை மீன்களை சீனா ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்து அறிமுகம் செய்தவர்!

வடசென்னைக்கு தான் வளர்ச்சி தேவை என மீன்பிடி துறைமுகத்தை ராயபுரத்தில் அமைப்பதற்கு முழு முயற்சி எடுத்தவர்!

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெரும்பங்கு வகித்த லூர்தம்மாள் சைமன் அவர்களை மக்கட்பணிகளை போற்றும் வகையிலும், அவரது வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் வகையிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அவருக்கு ஒரு மணி மண்டபமும், முழு உருவச்சிலையும் அமைப்பதோடு, அவரின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடவும் அமைக்கப்பட வேண்டும், தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

ஆகச்சிறந்த அரசியல் ஆளுமை லூர்தம்மாள் சைமன் அவர்களின் நினைவைப்போற்றுவோம்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version