நாம் தமிழர் கட்சி – போளூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி கோபிநாத் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா நாகராஜ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா நாகராஜ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




