நாம் தமிழர் கட்சி – தர்மபுரி சட்டமன்றத் தொகுதி, நல்லம்பள்ளி ஒன்றியத்தைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி தமிழ்ச்செல்வன் அவர்களின் அன்புமகன் சுதர்சன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
ஆருயிர் மகனை இழந்து வாடும் தம்பி தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புமகன் சுதர்சன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




