முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பணி நிரந்தரம் செய்யக்கோரி, தனியார்மயத்துக்கு எதிராக சென்னை, ரிப்பன் மாளிகை…

0

பணி நிரந்தரம் செய்யக்கோரி, தனியார்மயத்துக்கு எதிராக சென்னை, ரிப்பன் மாளிகை வாசலில் தொடர்ந்து 13 நாட்களாக அறவழியில் போராடி வந்த தூய்மைப்பணியாளர்களை திமுக அரசு காவல்துறையினர் மூலம் இரவோடு இரவாகக் குண்டுகட்டாகக் கைதுசெய்து, நகரின் 8க்கும் மேற்பட்ட வெவ்வேறு இடங்களில் 12 மணி நேரத்திற்கு மேலாக சிறைபடுத்தி அடைத்துவைத்துள்ளது. உறவுகளின் நிலை அறியவும், உடனடியாக விடுவிக்க வலியுறுத்தும் விதமாகவும் இன்று 14-08-2025 சென்னை வேளச்சேரியில் உள்ள மண்டபத்திற்கு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்.

தனியார்மயத்துக்கு ஆதரவாகவும், தனியார் முதலாளிக்கு ஆதரவாகவும் மண்ணின் மக்கள் மீது தொடுக்கப்பட்ட இத்தகைய கோரத்தாக்குதல்கள் திமுகவின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவுரை எழுதும் என்பது திண்ணம். திராவிட மாடலெனக் கூறி, அடக்குமுறை ஆட்சியைக் கட்டவிழ்த்துவிடும் ஆட்சியாளர்களே! உங்கள் அதிகாரத்திமிரும், பதவி மமதையும், ஆணவவெறியும் அடங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை!

https://t.co/4goCvLmuIe

https://t.co/lwB7Nc8uDr

Exit mobile version