முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

முப்பால் கண்டு தமிழ்கூறும் நல்லுலகிற்கு அப்பாலும் பெரும்புகழ் கொண்ட வள்ளுவப்…

0

முப்பால் கண்டு தமிழ்கூறும் நல்லுலகிற்கு அப்பாலும் பெரும்புகழ் கொண்ட வள்ளுவப் பெரும்பாட்டன்
தந்த அருந்தமிழ் மறைக்கு…

முத்தமிழ்ப்  பேரறிஞர்  சமகால  பெருங்கவி
ஐயா  வைரமுத்து  அவர்கள்
எழுதி வெளியிடவுள்ள
அரும்பத உரை தரும் பெரும்பொருள்
அறிய பேராவல் கூடுகிறது..!

ஈன்றாள் பசி காண்பாராயினும்
அறவழியில் வழுவாது நின்று
ஈட்டுவதே நற்பொருள்… அப்பொருள் மூலம் கிட்டுவதே இறவாத பேரின்பம்..!

அறம்… பொருள்… இன்பம் எனும்
மனிதப் பெருவாழ்வின் பிரிக்கவியலா பேருண்மைகள் மூன்றையும் விளக்கி, காலங்கள் தோறும் திருக்குறளுக்கு தமிழ்ச்சான்றோர் பலர்
தக்கச் சான்றுகளோடு பாயிரம் பாடி ஆயிரம் உரைகள் படைத்த பின்னும், வானமளந்து அனைத்துமளந்த வள்ளுவன் பாட்டினை அவ்வளவு எளிதில் எவராலும் அளந்துவிட முடியவில்லை..!

ஆனால், இப்போது வள்ளுவப்பெருமானை
எளிய தமிழ், இனிய தமிழ், சங்கம் வைத்து வளர்த்த மதுரை தமிழ், வைகை தமிழ், வடுகப்பட்டி தந்த வைரமுத்தமிழ் எனும்
இலக்கிய தொலைநோக்கியால்
தெளிவுற கண்டு இன்புற
கண்கள் பூத்திருக்க உலகத் தமிழர்கள்
காத்திருக்கின்றோம்..!
உலகில் எழுதப்பட்ட எல்லா உரைகளும்
செய்யுளுக்கு பொருள் மட்டுமே தரும்..
ஆனால் தமிழர் மறையாம் திருக்குறளுக்கு
எழுதப்பட்ட உரைகள்தான் பொருளோடு
அறம், இன்பம் மூன்றையும் தரும்..! அதிலும்
முத்தமிழ் பேரறிஞர் வைரமுத்து அவர்களின்
மொழிப் புலமையும், இலக்கியச் செழுமையையும்,
அறிவு வளமையும் இணையும்போது,
அது வான்புகழ் வள்ளுவர் தந்த தமிழ் மறைக்கு..
கவிப்பேரரசு வைரமுத்து சூட்டும் தேன்தமிழ் உரை
மகுடமாய் திகழும் என்பது திண்ணம்!

வள்ளுவப் பெருமகனார்
நமக்கு தந்தருளிய முப்பாலையும்
பருகிப் பயன் பெறுவோம்..!

முத்தமிழ்ப் பேரறிஞர் கவிப்பேரரசர்
வைரமுத்து  அவர்களின்
பணி சிறக்கட்டும்!

பாட்டன் பாரதி பாடியதுபோல
சொற்புதிதாய், பொருள் புதிதாய்,
சுவை புதிதாய், வளம் புதிதாய்,
சோதிமிக்க நல்லுரை, எந்நாளும் அழியாத
தெள்ளு தமிழ் தெளிவுரை
தமிழ்மறைக்கு தந்தமைக்கு
நன்றி நிறைந்த அன்பின் வாழ்த்துகள்..!

முத்தமிழ்ப் பேரறிஞர் வைரமுத்து அவர்களின்
புகழ்கொடி பறக்கட்டும்!
இப்பொழிப்புரை படித்து
தமிழ்க்குடி
சிறக்கட்டும்!

@Vairamuthu

Exit mobile version