முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்த்திரையுலகின் பழம்பெரும் திரைக்கலைஞர் அம்மா சரோஜாதேவி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து,…

0

தமிழ்த்திரையுலகின் பழம்பெரும் திரைக்கலைஞர் அம்மா சரோஜாதேவி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து, அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

தம்முடைய கலைநயமிக்க நடிப்பாற்றலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களில் நிறைந்து முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த அம்மா சரோஜாதேவி அவர்களின் புகழ், அவருடைய காலங்கடந்த காவியப் படைப்புகள் மூலம் என்றும் நிலைத்திருக்கும்.

அம்மா சரோஜாதேவி அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறை ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கின்றேன்.

அம்மா சரோஜாதேவி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

Exit mobile version