முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்து விவசாயத்தை அழிக்க முனைந்த…

0

புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்து விவசாயத்தை அழிக்க முனைந்த பாஜக அரசு, வேளாண் பெருங்குடி மக்களின் வரலாறு காணாத பேரெழுச்சி போராட்டம் காரணமாக வேறு வழியின்றி அதனை திரும்பப்பெற்றது. தற்போது அதைவிடவும் மிகப்பெரிய புரட்சியை, விவசாயிகளின் எழுச்சியினை இக்கொடிய முடிவால் பாஜக அரசு எதிர்கொள்ள நேரிடும்.

ஆகவே, இந்திய பெருநாட்டில் மிகப்பெரிய பஞ்சத்திற்கும் – பேரழிவிற்கும் வழிவகுக்கும் வேளாண்மைக்கு பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முடிவை பாஜக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

இல்லையென்றால், வரிக்கொடுமைகள் தாங்காது அல்லற்பட்டு ஆற்றாது அழும் நாட்டு மக்களின் கண்ணீரே இக்கொடிய ஆட்சியை வீழ்த்தும் பேராயுதமாகிவிடும் என எச்சரிக்கின்றேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

(2/2)

Exit mobile version