நாம் தமிழர் கட்சி – ஆவடி சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறைப் பொறுப்பாளர் அன்புத்தங்கை தி.முகிலா அவர்களின் தாயார் அம்மா தி.முத்துலெட்சுமி அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தங்கைக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா தி.முத்துலெட்சுமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




