முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாட்டுப்புறப் பாடகி, திரைப்பட நடிகை, வானொலி நிகழ்கலை நிகழ்த்துனர் என்று…

0

நாட்டுப்புறப் பாடகி, திரைப்பட நடிகை, வானொலி நிகழ்கலை நிகழ்த்துனர் என்று பன்முகத்திறன் பெற்ற அம்மா கொல்லங்குடி கருப்பாயி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

தமிழ் நாட்டுப்புற இசையின் முன்னோடியாக திகழ்ந்து, தமிழ் இளந்தலைமுறையினர் பலர் நாட்டுப்புற இசையில் ஆர்வம் கொள்ள காரணமாகி, அதன் மூலம் நாட்டுபுறப் பாடல்கள் வழக்கொழிந்து போகாமல் காத்திட்ட பெருமைக்குரியவர்.

அம்மா கொல்லங்குடி கருப்பாயி அவர்களின் கணீர் குரலும், தெள்ளு தமிழ்ச் சொல்லெடுத்து அவர் பாடும் கருத்துச்செறிவுமிக்க பாடல் வரிகளும், அதற்கேற்ற நாட்டுப்புற இசையும் கேட்போர் நெஞ்சை மயங்கச்செய்யும் ஆற்றலுடையது.

தமிழ்மண்ணில் நாட்டுப்புற இசை உள்ளவரை அம்மா கொல்லங்குடி கருப்பாயி அவர்களின் புகழும் நீங்காது நிலைத்திருக்கும்!

பாடல்கள் வழியே தமிழ் பண்பாட்டை கட்டிக்காத்த
பைந்தமிழ் பெருமாட்டி
கொல்லங்குடி கருப்பாயி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

Exit mobile version