தமிழ்மொழி மீது மாறாப் பற்றும், தீராக் காதலும் கொண்டு தனித்தமிழிலிலேயே பாக்கள் இயற்றும் பேராற்றல் கொண்ட பெருந்தகை!
தனித்தமிழ்ப்பெயர்களை உருவாக்கி, அரும்பெரும் களஞ்சியமாகத் தொகுத்து, அதனை வருங்கால தமிழ்த்தலைமுறையினருக்குப் பெருங்கொடையாக வழங்கியிருக்கும் போற்றுதற்குரிய பெருமகன்!
தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களைப் போற்றிக் கொண்டாடும் பாடல்களை இயற்றி, உலகத் தமிழர்களின் அன்பைப் பெற்ற பெருந்தமிழர்!
தமிழ்த்தேசிய இனத்தின் மீது கொண்டுள்ள அளப்பெரும் பற்றால் நாம் தமிழர் கட்சியில் இணைந்து என் கரங்களைப் பற்றியிருக்கும் தண்டமிழ் புலவர்! நற்றமிழ் பாவலர்!
நாம் தமிழர் கட்சியினுடைய ஆட்சிமொழிப் பாசறையின் மாநிலத் தலைவர் என் பேரன்பிற்கினிய மாமன் புலவர் தனித்தமிழ்வேங்கை மறத்தமிழ்வேந்தன் அவர்களுக்கு எனது அன்புநிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
தமிழையே உயிராய் கொண்டு வாழும் தாங்கள் இன்னும் பல்லாண்டு காலம் பெருவாழ்வு வாழ பேரன்போடு வாழ்த்துகிறேன்.




