சொற்றமிழ் புலவர்கள் புகழ்ந்து பாடிய நானிலம் வியக்கும் நற்றமிழ் மாமன்னன்,
வஞ்சிப்பூ சூடி வாட்போரில் வென்று வாகைப்பூசூடிய கோமாறன்,
நெஞ்சை அள்ளும் தஞ்சை தரணியை ஆண்ட தமிழ்ப்பெரும் மூதாதை,
கொடும்பாளுர், மணலூர், திங்களூர், காந்தலூர், அழுந்தியூர், காரை, மரங்கூர், புகழி, அண்ணல்வாயில், செம்பொன்மாரி, வெண்கோடல், கண்ணனூர் என, தான் நேர்நின்ற போர்க்களங்கள் யாவிலும் எதிரிகள் கலங்கிட படை பல வென்று, புறங்காணாது அறங்கண்ட புறநானூற்று பெருவீரன்..!
செந்தமிழ் வெண்பாக்கள் கொண்டு செந்தலை மெய்கீர்த்தி கண்ட 'விடேல் விடுகு விழுபேரதிரையன்'
தொல்தமிழர் வீரத்தின் பெருமைமிகு அடையாளம்,
நம்முடைய போற்றுதற்குரிய பெரும்பாட்டன் 'பெரும்பிடுகு முத்தரையர் என்கிற சுவரன் மாறன்' அவர்களின் 1350வது பிறந்தநாளான இன்று ஈடு இணையற்ற அவருடைய மாவீரத்தை நினைவுகூர்வோம்!
மானமும், வீரமும் கொண்டு தமிழ் நிலத்தை ஆளுகை செய்த பேரரசன்..!
எதிரியைப் புறமுதுகிட்டு ஓடச்செய்து தாய்மண்ணைக் காத்த வீரமறவன்..!
அருந்தமிழ்ப்பெரும்பாட்டன்
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களுக்கு பெருமிதத்துடனும், பேருவகையுடனும் நம்முடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
தமிழ்ப்பெரும் மூதாதை, 'வல்லவக்கோன்'
பெரும்பிடுகு முத்தரையர் (எ) சுவரன் மாறன் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
வைகாசி 09 | 23-05-2025





