முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி, தில்லைவிளாகம்…

0

நாம் தமிழர் கட்சி – திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி, தில்லைவிளாகம் கீழக்கரையைச் சேர்ந்த அயல்தேச ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி மா.சங்கர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன்.

மண்ணுக்கும், மக்களுக்குமான நாம் தமிழர் கட்சியின் புரட்சிகர மாற்று அரசியலை முழுமையாக ஏற்று, அதற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தம்பி மா.சங்கர் ஆவார். பொருளாதாரத் தன்னிறைவுக்காக அயலகத்துக்குச் சென்றபோதும் அங்குள்ள நாம் தமிழர் கட்சியின் உறவுகளோடு இணைந்து இனமானப் பணியாற்றினார்.

தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தம்பி மா.சங்கர் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version