முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – செங்கல்பட்டு சோழிங்கநல்லூர் மண்டலத்தைச் சேர்ந்த…

0

நாம் தமிழர் கட்சி – செங்கல்பட்டு சோழிங்கநல்லூர் மண்டலத்தைச் சேர்ந்த மடிப்பாக்கம் மாவட்டச் செய்தித் தொடர்பாளர் அன்புச்சகோதரர் இரமேஷ் வெங்கடேசன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

தமிழ் மண்ணுக்கும், மக்களுக்குமான தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் இணைந்து, மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளராகவும், மாவட்டச் செய்தித் தொடர்பாளராகவும் துடிப்புடன் களப்பணியாற்றி வந்த சகோதரர் இரமேஷ் வெங்கடேசன் அவர்களை இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.

தந்தையை இழந்து வாடும் அன்புமகள் ஸ்ரீநிதி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அன்புச்சகோதரர் இரமேஷ் வெங்கடேசன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version