தமிழ் இனம், மொழியின் மீதான தீராக்காதலால் தமிழ்த்தேசிய அரசியலில் பெரும்பற்றுக்கொண்டு, நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலந்தொட்டு என்னோடு பயணித்து என் தோளுக்குத் துணையாக நிற்கும் அன்புத்தம்பி!
தன்னுடைய ஆழமான வாசிப்புத்திறனாலும், அழுத்தமான தர்க்க ஆற்றலாலும்,
அறிவாயுதம் ஏந்திய தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் முதலில் பாயும் முன்கள வீரனாகத் தன்னை வரித்துக் கொண்ட என் ஆருயிர் இளவல்!
என்னுடைய பேரன்பிற்கினிய உடன்பிறந்தான் இடும்பாவனம் கார்த்திக் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
எல்லா வளமும், நலமும் பெற்று மகிழ்வுடன் நிறைவாக வாழ நிறைந்த மனதுடன் வாழ்த்துகிறேன்..!
வாழ்க..! வாழ்க..!




