மதுரையைச் சேர்ந்த அன்புத்தம்பி மணிகண்டன் அவர்கள் தலையில் ஏற்பட்ட பெரும் காயத்தின் விளைவாக, சுயநினைவற்று ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகச் சிகிச்சைப் பெற்று வருகிறார். மேலதிக சிகிச்சைக்கு 7 இலட்ச ரூபாய்வரை செலவாகும் என மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில், எளியப் பின்புலம் கொண்ட அவரது குடும்பம் செய்வதறியாது தவித்து நிற்கிறது. அவரது மனைவி சாந்தி ஒற்றை ஆளாய் நின்று தனது கணவரை மீட்டுக் கொண்டுவர பெரும் பாடுபடுகிறார்.
அவரையே பொருளாதாரத்திற்காக சார்ந்திருந்த அவரது மனைவியும், பிள்ளைகளும் பெரும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதோடு, தம்பியை மீட்டுக் கொண்டு வருவதற்குரிய மருத்துவச் செலவுகளுக்கும் வழியற்ற நிலையில் இருக்கின்றனர்.
பொருளாதார வசதிபடைத்த தாய்த்தமிழ் உறவுகள் தம்பியின் மருத்துவச் சிகிச்சைக்கு உதவிபுரிய வேண்டுமென உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.
உதவ வேண்டிய வங்கிக்கணக்கு விபரங்கள்:
Name: M.SHANTHI
AC No : 254501000019550
INDIAN OVERSEAS BANK
Branch: Anuppanadi
Branch code 2545
IFSC : IOBA0002545
GPAY/ Phone Pe: 8838194752
தொடர்புக்கு: 8838194752



