நாம் தமிழர் கட்சி – சென்னை இராதாகிருஷ்ணன் நகர் மண்டலச் செயலாளர் அன்புத்தம்பி ஜெகன் அவர்களின் தந்தை ச.பி.கருப்பையா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
பாசமிகு தந்தையை இழந்து வாடும் தம்பி ஜெகன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா கருப்பையா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




