முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – தமிழ்த்தேசியப் பேராசான் ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கு பிறந்தநாள் விழா

54

க.எண்: 2025040398அ

நாள்: 19.04.2025

அறிவிப்பு:

தமிழ்த்தேசியப் பேராசான்
ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கு
பிறந்தநாள் விழா

வாழ்த்துரை:
செந்தமிழன் சீமான் அவர்கள்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாள்:
20-04-2025 காலை 11 மணி முதல்

இடம்:
முத்தமிழ் நகர் (வ.உ.சி. தெரு)
சென்னை பம்மல்

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர், தமிழ்த்தேசியப் பேராசான் பெ.மணியரசன் அவர்களின் பிறந்தநாளையொட்டி, இராவணா வலையொளி ஒருங்கிணைப்பில், சிறுபான்மை மக்கள் நலக் கட்சியின் நிறுவனத் தலைவர் பேராயர் சாம் ஏசுதாஸ் அவர்களின் தலைமையில் வருகின்ற 20-04-2025 அன்று, காலை 11 மணியளவில் சென்னை பம்மல், முத்தமிழ் நகரில் (வ.உ.சி. தெரு) பிறந்தநாள் விழா கொண்டாடப்படவிருக்கிறது. இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கவிருக்கிறார்.

இந்நிகழ்வில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு


கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version