அறிவிப்பு: சனவரி 24, உடுமலைப்பேட்டை | மொழிப்போர் ஈகியர் நாள் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

822

க.எண்: 2024010010

நாள்: 17.01.2024

அறிவிப்பு:

எம்முயிர்த் தமிழ் காக்க; தம்முயிர் ஈந்த ஈகியரின் நினைவைப் போற்றும் மொழிப்போர் ஈகியர் நாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்டம் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வருகின்ற 24-01-2024 புதன்கிழமையன்று மாலை 04 மணியளவில் உடுமலைப்பேட்டை,  தாராபுரம் சாலையில் அமைந்துள்ள தாஜ் திரையரங்கம் எதிரில் மொழிப்போர் ஈகியர் நாள் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.

மொழிப்போர் ஈகியர் நாள் பொதுக்கூட்டம்
24-01-2024 புதன்கிழமை,
மாலை
04 மணியளவில்

நினைவேந்தல் பேருரை:
செந்தமிழன் சீமான்

இடம்:
தாராபுரம் சாலை, தாஜ் திரையரங்கம் எதிரில்
உடுமலைப்பேட்டை

இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், பகுதி, ஒன்றிய, கிளை உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்து பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் உணர்வெழுச்சியுடன் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு