உதவிப்பேராசிரியர் அன்புத்தங்கை ப.விமலா அவர்கள் மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்த ‘எனது ஆண்கள்’ என்ற நூலுக்கு 2025ஆம் ஆண்டிற்கான மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்திய அகாடமி இலக்கிய உயர் விருது அறிவிக்கப்பட்டுள்ளதை அறிந்து மிகுந்த மகிழ்வும், பெருமிதமும் அடைகிறேன்.
தொடர்ச்சியாகப் பல்வேறு நூல்களை மொழிபெயர்த்து அன்னைத்தமிழுக்கு அணி சேர்க்கும் தங்கையின் அர்ப்பணிப்பு மிகுந்த பணி போற்றுதற்குரியது.
அன்புத்தங்கை ப.விமலா அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!




